தொடர் விடுமுறை நாட்களில் ஓசூர், கிருஷ்ணகிரி, சூளகிரி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகிறார்கள். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அப்படி இருந்தும் நீண்ட நேரமாக பஸ்கள் இயக்கப்படாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், ஓசூர்.