கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் அருகில் ஏராளமான இரவு நேர கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் இருசக்கர, 4 சக்கர வாகனங்களை பலரும் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் நடக்கும் அபாயமும் உள்ளன. குறிப்பாக பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் திரும்ப கூடிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளின் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே பஸ் நிலையம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன், சூளகிரி.