வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2025-01-19 16:56 GMT

தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு செல்லும் சாலையில் ஆவின் பாலகம் உள்ளது. இதன் முன்புறம் 2 இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட பாதாள சாக்கடைகள் சாலையின் மட்டத்தில் இருந்து சற்று உயரமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடிகளை சாலை மட்டத்திற்கு அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-செந்தில்குமார், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி