தர்மபுரி நகரில் அதிக வாகன போக்குவரத்துக் கொண்ட இடமாக நேதாஜி பைபாஸ் சாலை உள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட இந்த சாலையின் மைய பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் மின்விளக்கு முறையாக எரிவதில்லை. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோருக்கு இரவு நேரத்தில் போதிய அளவில் வெளிச்சம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இரவு நேரத்தில் மின்விளக்குகள் முழுமையாக எரிவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பன், தர்மபுரி.