மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நான்கு ரோடு பகுதியை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் இரு வேளைகளிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.
-பிரவீன், மாரண்டஅள்ளி.