கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-12-22 12:23 GMT

சுல்தான்பேட்டையில் இருந்து தினமும் ஏராளமானோர் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் அவர்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே சுல்தான்பேட்டை பகுதியில் செஞ்சேரிபிரிவு, செஞ்சேரி, செஞ்சேரிமலை, காட்டம்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். 

மேலும் செய்திகள்