கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட நடைபாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து சுங்கச்சாவடி செல்லும் சாலையில் சோமார்பேட்டை, வெங்கடாபுரம் உள்பட பலவேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த பகுதி மக்கள் கிருஷ்ணகிரி நகருக்கு வர தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையில் ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இங்கிருந்து கிருஷ்ணகிரி பஸ் நிலைய டெப்போ அருகில் இணைக்கும் வகையில் உயர்மட்ட நடைபாலம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.