பஸ் வசதி

Update: 2025-12-21 18:57 GMT

 கோபியில் இருந்து குன்னத்தூர் செல்வதற்கு காலை 8.10 மணிக்கு 4-ம் எண் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அதன்பின்னர் 8.55 மணிக்கு 19ஏ டவுன் பஸ் கோபியில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் இந்த பஸ்களில் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். 8.30 மணிக்கு இயக்கப்பட்டு வந்த 4ஏ அரசு பஸ் 5 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால் பஸ் வசதி இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் காலை 8.30-க்கு மீண்டும் 4ஏ டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்