கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவை சுற்றிலும் சேலம் சாலை, சென்னை சாலை, பெங்களூரு சாலை, காந்தி சாலை, சப்-ஜெயில் சாலை அமைந்துள்ளன. இந்த பகுதியில் பஸ்கள் பயணிகளை ஏற்றுவதற்காக அதிக நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் பின்னால் வரக்கூடிய வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் காலை முதல் இரவு வரையில் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நீண்ட நேரம் நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?