நாகர்கோவில் கோட்டார் பகுதியில் சந்திப்பு ரெயில் நிலையமும், பள்ளிவிளையில் டவுண் ரெயில் நிலையமும் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பல ரெயில்கள் சந்திப்பு நிலையத்துக்கு வராமல் டவுண் நிலையம் வழியாக செல்கின்றன. இந்த இரு ரெயில் நிலையங்களுக்கும் இடையே போதிய பஸ் வசதிகள் அமைக்கப்படவில்லை. இதனால் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து டவுண் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடியாமல் செல்ல முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த ரெயில் நிலையங்களுக்கு இடையே பஸ் வசதியை ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.