பாலக்கோடு தாலுகா பஞ்சப்பள்ளி ஊராட்சி பெரியானூர் காலனியில் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள், பொதுமக்கள் அச்சத்துடனே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மேலும் நிழற்கூடத்தின் பின் பக்க சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை இடித்து விட்டு புதிய நிழற்கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெரியசாமி, புதுப்பேட்டை.