பர்கூர் ஜெகதேவி ரோடு மற்றும் திருப்பத்தூர் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கும், இறைச்சி கடைகளுக்கும் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் இறைச்சி எடுக்க வருபவர்கள் மோட்டார் சைக்கிள்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீசார் சாலையில் நிறுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-சிவராஜ், பா்கூர்.