கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-12-15 11:49 GMT

கோவை சிறுவாணி மெயின்ரோடு மாதம்பட்டி அருகே சென்னனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் காலையில் மாதம்பட்டியில் இருந்து பள்ளிக்கு செல்லவும், மாலையில் பள்ளியில் இருந்து மாதம்பட்டி வரவும் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றால், அதற்கு செல்ல முடியாமல் போகிறது. எனவே மாதம்பட்டியில் இருந்து பள்ளிக்கு சென்று வர கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி