பர்கூர் பேரூராட்சியில் புறநகர் பஸ் நிறுத்தம் கிடையாது. இதனால் இந்த பகுதியில் சாலையோரம் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சென்னை செல்லும் புறநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும். ஆனால் பஸ்கள் நிற்கும் பகுதியை சுற்றி வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் வணிக வளாகங்களுக்கு வருவோர் பஸ்கள் நிற்கும் இடத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, பர்கூர்.