வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-11-24 18:26 GMT

சேலம் செட்டிபட்டியில் இருந்து வட்ராம்பாளையம் வழியாக சாலை பிரிந்து எம்.ஜி.ஆர். சிலை, சென்றாயனூர், பெரமச்சிபாளையம் வழியாக குமாரபாளையத்திற்கு செல்கிறது. இந்்த சாலையின் இருபுறமும் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த சாலையை ஆக்கிரமித்துள்ள மரங்கள், செடி, ெகாடிகளை அகற்ற வேண்டும்.

-தீனதயாளன், தேவூர்.

மேலும் செய்திகள்