பந்தலூர் பழைய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் பலரும் படுத்து ஓய்வெடுக்கின்றனர். நீண்ட நாட்களாக அங்கேயே தங்கி ஓய்வெடுக்கும் சிலர், அசுத்தம் செய்து செல்கின்றனர். இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அத்துடன் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. எனவே அங்கு சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.