சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்கு உள்பட்ட கச்சராயனூர், கெண்டிநகர், வெள்ளாட்டுகாரனூர், மோட்டூர், ஆரிக்கவுண்டனூர், மாமரத்துக்காடு, கரும்பூசாலியூர் (எ) கோவில்பட்டி, ஆட்டுக்காரனூர் ஆகிய ஊர்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை வேலைகளில், பள்ளிக்கு சென்று வர போதுமான பஸ் வசதி இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த வழித்தடத்தில் இயங்கும் பஸ்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் செல்கின்றனர். எனவே அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு, சேலம்.