ஊட்டி படகு இல்ல சாலைேயாரத்தில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் நடந்து செல்லும் பாதசாரிகளும் சாலையில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வாகனங்களும் ஒன்றையொன்று கடந்து செல்ல வழி இல்லாததால் விபத்தை ஏற்படுத்தி கொள்ளும் நிலை உள்ளது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.