ஆபத்தான மேம்பாலம்

Update: 2024-04-14 17:39 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் மேம்பாலங்கள் அமைத்துள்ளன. இந்த மேம்பாலங்களில் ஒரு சில இடங்களில் பக்கவாட்டு சுவர்களில் அரச மரம் மற்றும் செடி வகைகள் முளைத்திருக்கின்றன. அதன் காரணமாக மேம்பால சுவர்கள் விரிசல் ஏற்பட்டு உடையும் ஆபத்தில் உள்ளது. இதனால் மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால், பேரிடர் நடக்கும் முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-விஜய், ஓசூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி