கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் சிவன் கோவிலுக்கு இடது பக்கம் செல்லும் தெருவின் ஆரம்ப நிலையில் வேகத்தடை உள்ளது. அங்கு வேகத்தடையை ஒட்டியபடியே இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு உள்ளது. சிவன் கோவிலுக்கு சென்று விட்டு நெடுஞ்சாலைக்கு வந்து இடதுபக்கம் திரும்பும்போது விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே வேகத்தடை அருகே விற்பனை செய்யப்படும் காய்கறி வண்டிகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.செல்வமணி, கீழ்பென்னாத்தூர்.