திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். வாகனங்களும் சென்று வருகின்றன. இந்தச் சாலையின் இருபக்கமும் இரு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும்.
-மூர்த்தி, திருப்பத்தூர்.