நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

Update: 2025-07-20 17:04 GMT

கண்ணமங்கலம் அருகே அழகுசேனை ஊராட்சி சூளைமேடு பகுதி திருவண்ணாமலை-வேலூர் மெயின் ரோட்டில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வேலூர் செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர். அந்த வழியாக வேலூர் செல்லும் பஸ்கள் நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால், மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சூளைமேடு பகுதியில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும்.

-கமலகண்ணன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்