காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பஸ் நிலையம் அமைந்துள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள் சென்னை, அரக்கோணம், திருத்தணி, காஞ்சீபுரம், பாணாவரம், சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார்கள். அங்கு, பஸ் பயண நேரம் குறித்த டிஜிட்டல் பலகை வைத்திருந்தனர். தற்போது அந்தப் பலகையை காணவில்லை. பஸ் நிலையத்தில் பஸ் பயண நேரம் குறித்த டிஜிட்டல் பலகையை மீண்டும் வைப்பார்களா?
-சத்தியமூர்த்தி, காவேரிப்பாக்கம்.