பஸ் பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2025-02-02 19:51 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்கிறார்கள். பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்கூட வசதி இல்லை. இதனால், பயணிகள் வெயில், மழைக் காலங்களில் ஒதுங்க கூட இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எங்கள் பகுதியில் எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-கார்த்திக், தூசி. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி