தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் இருந்து நடு குட்லானஅள்ளி, திண்ண குடலானஅள்ளி, பன்னிஅள்ளி, கொல்லப்பட்டி, ஜிட்டான்டஅள்ளி, மாரவாடி ஆகிய கிராமங்களுக்கு பல ஆண்டு்களாக பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், முதியவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-செந்தில், நடுகுட்லானஅள்ளி, தர்மபுரி.