அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்

Update: 2022-08-20 11:36 GMT


மயிலாடுதுறையில் பூம்புகார் கல்லணை சாலையில் மாப்படுகை பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. மயிலாடுதுறை ரெயில் நிலையத்தின் அருகில் உள்ளதால் அடிக்கடி இந்த சாலையில் கேட் மூடப்படுகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ -மாணவிகள் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் நவகிரக ஸ்தலங்களுக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். அடிக்கடி கேட்டு மூடப்படுவதால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயில்வே கேட்டை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மாப்படுகை.

மேலும் செய்திகள்