சாலையில் இறக்கி விடப்படும் பயணிகள்

Update: 2025-12-21 09:27 GMT

பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் பஸ் செல்வதில்லை. இதனால் பஸ் நிலையத்தின்முன்பு பயணிகள் ரோட்டில் இறக்கி விடப்படுகிறார்கள். இதன்காரணமாக பயணிகள் அவதிப்படுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அர்ஜூனன், பல்லடம்.

மேலும் செய்திகள்