தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கன்சால்பைல் கிராமம் மற்றும் அதனை சுற்றி 1,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அந்த கிராமத்திற்கு 35 ஆண்டு்களாக பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இந்தநிலையில் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்டூர் அரசு பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் வனப்பகுதியை கடந்து செல்வதால் வனவிலங்குகளால் அச்சுறுத்தலும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அந்த பகுதிக்கு பஸ்களை இயக்க வேண்டும்.
-ஜெயபால், கன்சால்பைல், தர்மபுரி.