வாகனங்களால் மாணவர்கள் அவதி

Update: 2022-08-14 15:48 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியில் நான்கு ரோடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளி நுழைவு வாயில் முன்பு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். அந்த வாகனங்களால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி அங்கு வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்