பாலம் சீர் செய்யப்படுமா?

Update: 2025-11-09 12:41 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தானில் இருந்து அனைக்குடி கிராமத்திற்கு செல்லும் வழியில் பொன்னார் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ள பாலம் ஒரு முனையில் இடிந்து விழுந்து சிதிலமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக அனைக்குடி கிராமத்திற்கு நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தை சீர் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்