சூளகிரி பஸ் நிலையம் எதிரில் உத்தனப்பள்ளி செல்லும் சாலை ஓரத்தில் மேம்பாலத்தின் அருகில் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் முன்பு இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி பலரும் செல்கிறார்கள். இதனால் சூளகிரி நகருக்குள் வரக்கூடிய வாகனங்களும், உத்தனப்பள்ளி செல்ல கூடிய வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சூளகிரி பஸ் நிலையம் எதிரில் சாலையில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சென்ன கிருஷ்ணன், உத்தனப்பள்ளி.