அந்தியூர்- கோபி மார்க்கமாக காலை 6.50 மணிக்கு 20டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அடுத்த பஸ் 9 மணிக்கு செல்கிறது. ஆனால் அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 மணிக்கு முன்பே வகுப்புகள் தொடங்கிவிடுவதால் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன்கருதி காலை 8.10 மணிக்கு அரசு டவுன் பஸ் அந்தியூரில் இருந்து கோபி மார்க்கமாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?