சாலையை ஆக்கிரமித்துள்ள பழக்கடைகள்

Update: 2025-11-09 16:40 GMT

திருச்சி மாவட்டம் துவரங்ககுறிச்சி அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமத்துவபுரத்தில் பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வீஸ் சாலையில் இருந்து பைபாஸ் சாலையில் ஏறும் பகுதியில் இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையோர வழியை சிலர் ஆக்கிரமித்து பழக்கடைகள் வைத்துள்ளனர். இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகள் பழங்களை வாங்கிச்செல்கிறார்கள். இதனால் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக உள்ளதுடன், விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்