விழுப்புரம் கோட்டத்தில் இருந்து இயங்கும் தடம் எண்: 204, 245 உள்பட 4 பஸ்கள் ஆரணி-வந்தவாசி சாலையில் உள்ள பெரணமல்லூர் வழியாக செல்ல வேண்டும் என்ற ஆணையை பின்பற்றுவதேயில்லை. பல நாட்கள் ஆரணி-வந்தவாசி சாலையில் நேராக சென்று விடுகின்றன. இதனால் பெரணமல்லூரில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள், பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்த பஸ்கள் சரியான வழித்தடத்தில் இயங்குவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்வேலன், பெரணமல்லூர்