மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2025-11-09 17:41 GMT
நெய்வேலி மந்தாரக்குப்பம் புது பஸ் நிலையத்தில் விருத்தாசலம்- கடலூர் செல்லும் சாலையில் மாடுகள் அதிகளவில் சாலையில் படுத்து கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்