நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அண்ணா சிலை பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அங்கு நிழற்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-பூபதி, வெண்ணந்தூர், நாமக்கல்.