மயிலாடுதுறையிலிருந்து செம்பியன்கோமல் செல்லும் அரசு பஸ் காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் எங்கள் ஊருக்கு இயக்கப்படுகிறது. இந்தநிலையில் தற்போது அந்த பஸ் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் கூடுதல் பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,செம்பியன்கோமல்