தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த இண்டூர் அருகே குப்புசெட்டிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தத்தில் 4 வழியை இணைக்கும் சாலை உள்ளது. கோவில் விழா நாட்களில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் விபத்தில் காயம் அடைகின்றனர். எனவே அங்கு சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, இண்டூர், தர்மபுரி.