கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-08-02 15:52 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 2 நாட்கள் விழாக்கள் நடக்கிறது. அதனை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும்போது சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வரும்போது அதில் உள்ள சைலன்சரை கழட்டி விட்டு அதிக சத்தத்துடன் வருகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இதுபோன்று செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்