தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஊருக்குள் பகல் நேரத்தில் வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு நேரத்தில் வருவதில்ைல. இரவில் வரும் பஸ்கள் தொப்பூருக்குள் செல்லாமல் பயணிகளை, தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடனே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தொப்பூருக்கு நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
-ரவி, தர்மபுரி.