புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர், கருவேப்பிலையான், ரெயில்வே கேட், ஐ.டி.ஐ. காலனி ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேலைகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. மேற்கண்ட வழித்தடத்தில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுவதினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் படியில் இருந்து தவறி விழும் நிலை உள்ளது. எனவே உயிரிழப்பு ஏற்படும் முன்பு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.