வேகத்தடை அமைக்கப்படுமா ?

Update: 2022-07-27 11:00 GMT

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சாலையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வேகத்தடை அவசர தேவைக்காக அகற்றப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மீண்டும் வேகத்தடையை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-சதீஷ், நாமக்கல்.

மேலும் செய்திகள்