பஸ் வசதி தேவை

Update: 2023-09-06 17:19 GMT

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் ஏரிபுதூர் உள்ளது. இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பஸ் வசதி வேண்டி கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பஸ் வசதி இல்லாமல் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்ல கூடியவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவானந்தம், ஏரிபுதூர், சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி