சேலம் புதிய பஸ் நிலையத்தில் 5 அடுக்கு கொண்ட கார் பார்க்கிங் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் கார்களை நிறுத்த இடமில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?.
-வேல்மணி, சேலம்.