போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-24 16:15 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் குறுகலான சாலைகளாக உள்ளன. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி உள்ளதால் ஏராளமான வாகனங்கள் ராசிபுரம் வழியாக சென்று வருகின்றன. இதனால் ஆத்தூர் சாலையில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் ஒருவழி பாதையிலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காலை மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி வாகனங்கள் சென்று வருகிறது. எனவே அந்த நேரங்களில் போக்குவரத்து பிரிவு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.

-பாலமுருகன், ராசிபுரம்.

மேலும் செய்திகள்