சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தினமும் 65-க்கும் மேற்பட்ட ெரயில்கள் வந்து செல்கின்றன. சேலத்தில் இருந்து தினசரி 1000-க்கும் மேற்பட்டோர் வெளி ஊர்களுக்கும், வெளி ஊரில் இருந்து சேலத்திற்கும் வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. நுழைவாயிலில் இருந்து நடைமேடைகளுக்கு சென்று வர தற்போது ஒரு பேட்டரி கார் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றன. எனவே பயணிகள் நலன் கருதி நடைமேடைகளுக்கு எளிதாக சென்று வரும் வகையில் கூடுதலான பேட்டரி கார்களை இயக்க வேண்டும் என ெரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.-சதீஷ்குமார், போடிநாயக்கன்பட்டி, சேலம்.