போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-28 17:46 GMT

சேலம் கந்தம்பட்டியில் இருந்து இளம்பிள்ளைக்கு செல்லும் சாலையில் தினமும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. இந்த சாலை முன்பு அகலமாக இருந்தது. தற்போது சிவதாபுரம் முதல் பனங்காடு பகுதி வரை இருபுறமும் சாலை ஆக்கிரமித்துள்ளதால் சாலை குறுகலாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்புச் சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், சிவதாபுரம், சேலம்.

மேலும் செய்திகள்