சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலை சேதமடைந்த காரணத்தால் குப்பனூர் சாலை வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் நேராக ஏற்காடு பஸ் நிலையம் சென்று சுற்றுலா பயணிகளை இறக்கி விடுகின்றன. போட் ஹவுஸ், அண்ணா பார்க், மான் பூங்கா, ஏரி பூங்கா அனைத்தும் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் நடந்து செல்லும் நிலைக்கு உள்ளாகின்றனர். எனவே சேலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் இறக்கி விட்டால் சிரமம் இன்றி ஏற்காட்டின் அழகை ரசிக்க முடியும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அ.அந்தோணி ராஜ், சேலம்.