நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் போக்குவரத்துக்காக சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. திருச்செங்கோடு செல்லும் சாலை, சேலம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த பல மாதங்களாக அவை செயல்படாமல் உள்ளது. இதனால் திருச்செங்கோடு சாலையிலிருந்து ஈரோடு செல்லும் வாகனங்கள், சேலம் சாலையில் இருந்து ஈரோடு நோக்கி வேகமாக வாகனங்கள் வரும்போது ஒன்றை ஒன்று கவனிக்கும் வாய்ப்பு இல்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிக்னல் விளக்கை சரி செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-மணிமாறன், பள்ளிபாளையம், நாமக்கல்