சேலம் மாவட்டம் சங்ககிரி ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே தரைவழி பாலம் குறுகலாக உள்ளதால் ஒருவழி பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் குறுகிய பாலத்தால் கனரக வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிறது. எனவே தரைவழி பால பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்று நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்கள் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமேஸ்வரன், சங்ககிரி.